700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை..!!

தெலுங்கானாவில் பட்டுப்போகும் நிலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மெகபூப் நகரில் மையப்பகுதியின் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது.

சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள இந்த ஆலமரத்தின் கிளை ஒன்று கடந்த சில காலங்களுக்கு முன்பு பூச்சிகளால் அரிக்கப்பட்டது. இதன் தாக்கம் ஒட்டு மொத்த மரத்திற்கும் பரவி தற்போது ஆலமரம் பட்டு போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆலமரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மனிதர்களுக்கு குளுக்கோஸ் செலுத்துவது போல் ஆலமரத்திற்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here