ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இனிப்பு வழங்கி போலீசார் அறிவுரை

பைக் விபத்து ஏற்படும்போது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நாகர்கோவில் மணிமேடை அருகே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களிடம் ஹெல்மெட் அணியாமல் சென்றால் நடக்கும் விபரீதங்களை போலீசார் எடுத்து கூறினர். பின்னர் அவர்களுக்கு பைக் ஓட்டிச்செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மற்றும் இனிப்பு வழங்கி அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த செயலை பார்த்து பலர் பாராட்டினர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here