ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி..

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து மாகாணங்களில், திங்கள்  கிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. வசந்தம் முடிந்து கோடை ஆரம்பமாவதால் பெரும்பாலானாவர்கள் விமுறை கொண்டாட ஆயத்தமாயினர்.

ஆனால் மே -27 ம் தேதி சனிக்கிழமை, நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் நாஷுவா நகரில் தமிழ் வம்சாவழியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கில் தமிழுக்காக அணிதிரண்டனர்.ஆம், அமெரிக்கத் தமிழர் வரலாற்றில் முதல் முறையாக தமிழுக்காக நடைபெற்ற ஓர் விழிப்புணர்வு பேரணி அது. உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டில் தமிழ் ஆணையம்/இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் பேரணி. தமிழிருக்கை நிறுவுவதன் மூலம் தமிழ்க் கல்வி, ஆராய்ச்சி பெருகும், அமெரிக்காவில் தமிழ் மலரும், உலகெங்கும் தமிழின் பெருமை என்றென்றும் பரவும்.

இப்பேரணி விழாவில் கலந்த்துகொண்டு பேசிய தமிழ் இருக்கை அமைப்பின் அறங்காவலர் திரு.சம்பந்தம் அவர்கள் ” எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று, சங்கே முழங்கு ” என கோஷமெழுப்பி, தமிழர்களின் ஒற்றுமையும், தமிழுணர்வும் மெய்சிலிர்க்க வைப்பதாக கூறினார்.தமிழ் பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவிகள் லயா அனந்தகிருஷ்ணன் மற்றும் சக்தி குமரேசனின் தமிழ் சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த பேரணியின் மூலமாக சுமார் 75,000 டாலர்கள் நிதி திரட்ட பட்டுள்ளது என்பது வியக்க வைக்கும் உண்மையாகும்.திரு. அணில் சைகல் மற்றும் திருமதி.ரஞ்சனி சைகலின் அனல் பரக்கும் பிரச்சாரம், அனைவரின் நன்கொடையை ஈர்த்தது.

தமிழ் வம்சாவழி மருத்துவர்களான Dr. Sambantham மற்றும் Dr.Janakiraman இருவரும் தலா 500 ஆயிரங்கள் வழங்கி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றனர். ஆனால் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் நிதி தேவை. இதுவரை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருக்கும் தமிழ் ஆர்வலர்களால் வழங்க பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இது போன்ற பேரணிகள் மற்றும் நிதி திரட்டும் விழாக்களின் மூலம் திரட்டித்தருவதாக அமெரிக்காவில் உள்ள பல மாகாண தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக தமிழ் இருக்கை அறங்காவலர் குழு கூறுகிறது.

தமிழால் ஒன்றிணைவோம் .! ஹார்வர்டில் தமிழ் வளர்ப்போம்! நமது அமுதத் தமிழை ஒரு நிரந்தரமான சிம்மாசனத்தில் அமர்த்தும் இது போன்ற சரித்திர நிகழ்வுகளை ஆதரிப்போம்.ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு உங்களால் இயன்ற நன்கொடையை இன்றே வழங்குங்கள். மேலும் விவரங்களுக்கு http://www.harvardtamilchair.org .

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here