ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு – சிங்கப்பூர்

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் அன்னை ஸ்ரீ துர்க்கா தேவியை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்து பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மரபு மாறாமல் சிங்கப்பூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷனில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் வழிபாட்டுடன் அன்னை ஸ்ரீ துர்க்கா தேவிக்கும் விசேஷ பூஜைகள் நான்கு நாட்கள் நடைபெற்றன.

சுமார் 3500 பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஸ்ரீ தேவி மகாத்மியம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சர்வ அலங்கார நாயகியாக ஜொலித்த ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு புஷ்பாஞ்சலியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டபோது பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

புகழ்பெற்ற ஆன்மிகப் பாடற் கலைஞர்கள் பங்கேற்று பஜனைப் பாடல்களில் பக்தர்களை லயிக்க வைத்தனர். ஆலயத் தலைவர் ஸ்ரீ விமோக்சாநந்தாஜி மகராஜ் புனித கலசத் தீர்த்தத்தை பக்தர்களுக்குத் தெளித்து ஆசிர்வதித்தார்.

விசேஷ பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சகல வித சௌபாக்கியங்களையும் ஸ்ரீ லட்சுமி – சரஸ்வதி – விநாயகப் பெருமான் – கார்த்திகேயன் நல்கட்டும் என ஸ்வாமிஜி வாழ்த்தினார். கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here