வாக்காளர் விபரங்கள் தேசிய அளவில் இணைப்பு – தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் விபரங்கள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனியே வாக்காளர் பட்டியல் உள்ளது. இவை மாநில அளவில் மட்டும் கம்ப்யூட்டர் வாயிலாக ஒருங்கிணைந்து உள்ளன.

இதனால் மாநிலத்திற்குள் ஒரு தொகுதியில் இருந்து ஒருவர் வேறு தொகுதிக்கு மாறும் போது ஏற்கனவே இருந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருந்தது. ஆனால் வாக்காளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது அவர் பெயர் ஏற்கனவே இருந்த வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்தது.

குறிப்பாக, மாநில எல்லைகளில் வசிப்போர் இரு மாநிலங்களில் வாக்காளர்களாக இருந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து மாநில வாக்காளர் விபரங்களும் ‘ஈரா நெட்’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக வாக்காளர்கள் விபரம் ஆகஸ்ட் 7ல் ஒப்படைக்கப்பட்டது.

இனி, வாக்காளர் வேறு மாநிலத்திற்கு சென்று தன் பெயரை பதிவு செய்தால், ஏற்கனவே இருந்த மாநிலத்தில் உடனடியாக அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதனால் இரு மாநிலங்களில், ஒருவர் வாக்காளராக இருக்கும் நிலை தடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here