வாகனம் ஓட்டும் போது இனி அசல் ‘லைசென்ஸ்’ கட்டாயம்

“தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டுனர்களும் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகனம் ஓட்டும் போது தங்களது ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டும்” என தமிழக அரசு அறிவித்துள்ளது.

“சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுற்றுச்சூழலை பாதிக்காத 200 பேட்டரி பஸ்கள் இயக்கப்படும், அதற்கு முன் சோதனை ரீதியாக ஒரு மாதத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும்,” என, போக்குவரத்து துறை அமைச்சர், கூறினார். சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பேட்டரி பஸ் சோதனை ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்தன.

இதில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், கூறியதாவது: “தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க, அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால் ஜூன் வரையிலான கால கட்டத்தில் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 3,244 விபத்துகளும், 309 உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன.

அவற்றை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிவப்பு விளக்கை தாண்டி செல்லுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட, விதிமீறல்களில் ஈடுபட்ட 9,500 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். செப்டம்பர்  முதல் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு, விரைவில் 2,000 பஸ்கள் வாங்கப்படும். அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கும் முன் அனைத்து பஸ்களின் கூரைகளும் சரி செய்யப்படும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நன்றாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here