ராசல் கைமாவில் இந்திய குடியரசு தின விழா

ராசல் கைமா இந்திய ரிலீஃப் கமிட்டியின் சார்பில் இந்தியாவின் 69-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுமதி வாசுதேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அவர் தனது உரையில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார். மேலும் ராசல் கைமாவில் இந்திய சமூகத்துக்காக சிறப்பான வகையில் பாடுபட்டு வரும் இந்திய ரிலீஃப் கமிட்டி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் இந்திய ரிலீஃப் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here