யாத்ரீகர்கள் அமர்நாத் குகைகோயிலில் சிலைக்கு முன் அமைதி காக்க வேண்டும் : பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இமயமலைத் தொடரில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் இயற்கையாக பனி லிங்கம் உருவாவது வழக்கம். இதைக் காண்பதற்காக ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை தொடங்கும். சுமார் 40 நாட்களுக்கு நடைபெறும் இந்த யாத்திரையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  அமர்நாத் குகை கோயிலில் ஒலிமாசுபாடு இருக்கக்கூடாது என்றும், குகைக்கோயிலில் மந்திரங்கள் மற்றும் மணியோசை கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குகைக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து அமர்நாத் குகைகோயிலின் உட்புறம் வரையில் அமைதி நிலவு வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகைகோயிலின் சுற்றுவட்டாரப்பகுதிகளை அமைதி காப்பது நிலச்சரிவு, மாசுபாடு போன்ற அபாயங்களை தடுக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுசூழல் ஆர்வலர் கவுர் மாலிகி கூறுகையில் “அமர்நாத் கோயிலில் யாத்ரீகர்கள் பூஜை செய்வதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு இது வசதியாக இருக்கும். அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும். இது மிகவும் நல்ல மற்றும் முற்போக்கான வழிநடத்துதலாகும்”. இவ்வாறு அவர் கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here