மெழுகுவர்த்தியிலிருந்து மின்சாரம்!

வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம், இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே வந்துவிட்டது என்றாலும், அந்த தொழில்நுட்பம் வீடுகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு சரியான கருவிகள் உருவாக்கப்படவில்லை.
நார்வேயைச் சேர்ந்த, ‘லூமினைசர்’ நிறுவனம், சாதாரண மெழுகுவர்த்தி தரும் வெப்பத்தை வைத்து சில எல்.இ.டி., விளக்குகளை ஆறு மணி நேரம் வரை எரியச் செய்யும் லாந்தர் விளக்கை உருவாக்கி இருக்கிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி லூமினைசருக்குள் வைத்துவிட்டால், அந்த வெப்பத்திலிருந்து மின்சாரத்தை தயாரித்து, எல்.இ.டி., விளக்குகள் பளிச்சென்று எரிகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், மெழுகுவர்த்தி தரும் வெளிச்சத்தை விட, 15 மடங்கு வெளிச்சத்தை இந்த எல்.இ.டி., விளக்குகள் தருகின்றன. செவ்வாய் கிரகத்தில் வலம் வரும், ‘கியூரியாசிட்டி’ ஊர்தியிலும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப் படுகிறது என்கிறது, லூமினைசர் நிறுவனம். வரும் ஆகஸ்ட் மாதத்தில் இணையத்தில் விற்பனைக்கு வரவுள்ளது, இந்த மெழுகுவர்த்தி மின் லாந்தர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here