மெல்பெர்ன் நகரில் ”தமிழர் விளையாட்டு விழா”

ஆஸ்திரேலியா மெல்பெர்னில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டு விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடந்தது. மெல்பெர்ன் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் ஆஸ்திரேலியத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் பவித்திரன் ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.

துடுப்பெடுத்தாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான ஓட்டப் போட்டி, தவளைப்பாய்ச்சல், தடைதாண்டி ஓடுதல், பலூன் ஊதி உடைத்தல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், கிளித்தட்டுப்போட்டிகள் நடைபெற்றன. கிளித்தட்டுப் போட்டியில் எல்லாள அணி, கயிறு இழுத்தல் போட்டியில் வடமராட்சிக்கிழக்கின் உதயம் அணி, துடுப்பெடுத்தாட்ட போட்டியில் சிவாஸ் அணி, உதைபந்தாட்ட போட்டியில் மில்லர்-ஆ அணி, கரப்பந்தாட்ட போட்டியில் தமிழ்பாய்ஸ் அணி, கரப்பந்தாட்டம் மிக்ஸ்கேம் போட்டியில் டெனிஸ் அணி வெற்றி பெற்றன.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற சிறுவர்கள் அனைவருக்கும், வெற்றியீட்டிய அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களும், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தாயகத்து உணவு வகைகளான தோசை, அப்பம், பூரி, வடை, இளநீர் விற்பனை செய்யப்பட்டன.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here