மருத்துவமனை அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – மத்திய அரசு

மருத்துவமனை அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ஜிஎஸ்டியின் கீழ், 1000 ரூபாய்க்கு குறைவான அறை வாடகைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரையில் 12 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதேபோல 2500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய் வரையில் 18 சதவிகிதமும் 7500 ரூபாய்க்கு மேல் 28 சதவிகிதமும் அறை வாடகையில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.

கூடுதல் படுக்கைகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து வசூலிக்கப்படும் மொத்த கட்டணத்திற்கு இந்த ஜிஎஸ்டி விதிக்கப்படும். அறையின் தரம் உயர்த்தப்பட்டு, வாடகை வேறாக இருந்தாலும், உண்மையான கட்டணத்தின் அடிப்படையிலேயே இந்த வரிவிதிப்பு இருக்கும்.

உண்மையான கட்டணம் ரூ. 7,000 ஆக இருந்து தரம் உயர்த்தப்பட்டதற்கு ரூ. 10,000 வசூலிக்கப்பட்டாலும், பத்தாயிரத்திற்கே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். எந்த இடத்தில் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த கட்டணத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். பல்வேறு காலநிலைகளுக்கு பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும், எந்த நேரத்தில் அந்த அறையை வாடகைக்கு எடுக்கிறோமோ, அந்த நேரத்தின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி பொருந்தும். மருத்துவமனைகளில் அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது”. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here