மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தேசிய விருது – தூய்மை பாரதம் அறிவிப்பு

மத்திய அரசு கடந்த ஆண்டு தூய்மை பாரதம் திட்டத்தை அறிவித்தது. இதன்படி சுத்தமாக பராமரிக்கப்படும் புனிதமான 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் சுகாதார துறை சார்பில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தி சுகாதாரத்துடன் பராமரிக்க மத்திய அரசு 11 கோடியை ஒதுக்கியது. இதில் மேற்கொண்ட பராமரிப்பு பணிகள் மூலம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்று விருது கிடைத்துள்ளது.

இது குறித்து மதுரை கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ‘‘மத்திய அரசின் நிதி மூலம் கோயில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தூய்மை பாரதம் விருதுக்காக, நாடு முழுவதும் உள்ள 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் தேசிய அளவில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு முதலிடத்திற்கான விருது கிடைத்துள்ளது,’’ என்றார்.

இதற்கான விருது, டெல்லியில் இன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனிஷ் சேகர் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here