மதுரைக்கும் மகாத்மாவுக்குமான தொடர்பு..!!

மதுரை நகரத்தின் அடையாளங்களில் ஒன்று காந்தி அருங்காட்சியகம். சுமார் 320 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் காந்தி தொடர்புடைய பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. காந்திஜியின் அரிய புகைப்படங்கள், அவர் அணிந்த மூக்குக்கண்ணாடி, நூல் நூற்ற ராட்டை, காலணிகள், தலையணை, கம்பளி என ஏராளமான பொருட்கள் இங்குள்ளன.

காந்திஜியின் ரத்தக்கறை படிந்த வேஷ்டி இங்கு வரும் அனைவரையும் கவர்கிறது. பாரம்பரிய ஆடை அணிந்திருந்த காந்தியை எளிமையான ஆடைக்கு மாற வித்திட்டதும் மதுரை தான். 13 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுப் பெட்டகமாக திகழும் இந்த அருங்காட்சியகத்தை காண, மாதம் தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகின்றனர். குறிப்பாக தேசத்தின் வரலாற்றை தமது குழந்தைகளுக்கு புகட்ட விரும்பும் பெற்றோர் தம் பிள்ளைகளை இங்கு அழைத்து வருகின்றனர்.

காந்தி அருங்காட்சியகத்தில் பலரையும் கவரும் அம்சம் இங்கு வைக்கப்பட்டுள்ள அவரது அஸ்தி. இதைக்கண்டு பலரும் மெய்சிலிர்த்து வணங்கிச் செல்கின்றனர். மேலும் காந்திஜி தம் வாழ்நாளில் 5 முறை மதுரை வந்துள்ளார் என்றும் அதில் ஒரு முறை, ஹரிஜன மக்களோடு வந்து மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட்டதும் ஒன்று என இந்த அருங்காட்சியகத்தின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here