பஹ்ரைனில் தமிழ்நாடு..!!

அரபு நாடான பஹ்ரைனில் அந்நாட்டு பிரதமர் உயிர்திரு. சேக் கலீபா பின் சல்மான் அல் கலிபா அவர்களுடைய ஆதரவுடன் வருடா வருடம் நடைபெறும் BAHRAIN FOR ALL என்ற நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018 மாலை பிரின்ஸ் கலிபா பின் சல்மான் பூங்காவில் சுமார் 55,000 பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பஹ்ரைனில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, எதியோப்பியா, நேப்பால், ஜோர்டான், கென்யா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சங்கங்களுடன் தமிழர்களின் சார்பாக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் கலந்து கொண்டது. இதில் தமிழனின் பாரம்பரிய கலைகளான புலியாட்டம், கரகாட்டம், ஒயில்லாட்டம், ஆதிப்பரையாட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு மாதிரி ஆகியவை பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தூதர்கள் மற்றும் பஹ்ரைன் அரசின் அமைச்சர்கள் உயிர் அதிகாரிகள் முன்னிலையில் மேடையில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

தமிழனின் பாரம்பரிய கலைகளை இந்த அந்நிய மண்ணில் எடுத்துரைத்ததர்க்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here