பழநி கோயிலில் இலவச தொலைபேசி சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக கூறி, பக்தர்களிடம் சிலர் ஏமாற்றுகின்றனர். இதனை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை, கோயில் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 1800 425 9925 என்ற எண்ணுக்கு போன் செய்தால் கோயிலில் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்யும் வழிமுறை, வின்ச், ரோப்கார் இயக்க நேரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படும் என திருக்கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here