பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி..!!

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்காக சிறப்பு பயிற்சி மையம் அமைத்து அவர்களை பயிற்றுவித்து பள்ளி கல்விக்கு தயார்படுத்தும் பணியை மேற்கொள்ள ஆர்வம் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் திட்ட அறிக்கையை அனுப்பலாம் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

6 வயது முதல் 14 வயது வரையிலுள்ள பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு யுனிவர்சல் எலிமென்ட்ரி எஜூகேஷன் மிஷனின்(யுஇஇஎம்) சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருகிற 24ம் தேதிக்குள் மாநில பள்ளி கல்வித்துறையிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட மையங்களுக்கு நேரில் வந்து அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்வார்கள். பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு கமிட்டி பரிசீலித்து ஆவணங்கள், திறமையின் அடிப்படையில் கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும். அதன்பின் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் தேர்வான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here