நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

‘நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. வங்கிக் கிளைகளில், நாணயங்களை ஏற்க மறுப்பதாக வந்த புகார்களை அடுத்து, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு : “வங்கிக் கிளைகளில் 10 ரூபாய், 5 ரூபாய் போன்ற நாணயங்களை வாங்க மறுப்பதால் சிறு வணிகர்களும், நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் 10, 5, 2, 1 ரூபாய் என அனைத்து நாணயங்களையும், வங்கிக் கிளைகள் ஏற்க வேண்டும்.

நாணயங்களை, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் செலுத்தினாலும், ரூபாய் நோட்டுகளாக கேட்டாலும், அதை வங்கிகள் ஏற்க வேண்டும். ஏற்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய காரணங்களுக்காக வெவ்வேறு வடிவமைப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்பதால் மக்களும், வியாபாரிகளும் அச்சப்படத் தேவையில்லை”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here