நவோதயா பள்ளிகள் என்றால் என்ன?

மாநில அரசு நிலம் மட்டும் ஒதுக்க, மத்திய அரசு நிதியில் கட்டப்படும் பள்ளிகளே நவோதயா பள்ளிகள் ஆகும். கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் நோக்கத்தோடு நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா ‘உண்டு உறைவிட’ பள்ளி தொடங்க வேண்டும் என்று கடந்த 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.

இந்தப் பள்ளிகளை தொடங்க மாநில அரசுகள் நிலம் மட்டும் கொடுத்தாலே, ஒவ்வொரு பள்ளியை கட்டவும் மத்திய அரசு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதில் 75 சதவீத இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதுடன், மூன்றில் ஒரு பங்கு மாணவிகளுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

இங்கு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிலும் வாய்ப்பு இருந்தாலும், அதற்கு பிறகு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்கும் என்பதே தமிழக அரசு இந்த பள்ளிகளை எதிர்க்கக் காரணமாக இருந்திருக்கிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுவதுடன், பன்முக பயிற்சியும் அளிக்கப்படு‌ம் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here