தமிழ் விளையாட்டு போட்டிகள் – ஒமாஹா

நமது தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் அறிந்துகொள்ளவும் விளையாடவும் ஒமாஹா தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கான ‘தமிழர் விளையாட்டுகள் ஒரு அறிமுகம்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பிரபாவதி, சங்கீதா, ஸ்ரீவித்தியா, புவனா, பிரேமலதா மற்றும் சுபாஷினி ஆகியோர் முன்னேடுத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பெருவாரியான தமிழ் குழந்தைகள் ஆர்வமுடன் பல்வேறு விளையாட்டுகளை கண்டும் கேட்டும் குதூகலமுடன் விளையாடி மகிழ்ந்தனர். பல்லாங்குழி, சோழி, பரமபதம், ஆடுபுலி ஆட்டம், கோலி மற்றும் பம்பரம் போன்ற விளையாட்டுகளை எல்லா வயது குழந்தைகளும் விளையாடி மகிழ்ந்தனர். வந்திருந்த பெற்றோர்கள் பலரும் மறந்து போன நமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி குழந்தைகளாக மாறி குதூகலித்தனர்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலாக நவீன மின்னணு சாதனங்கள் ஏதுமின்றி நமது மறந்து போன தமிழ் விளையாட்டுக்களை தங்கள் குழந்தைகள் விளையாடியதை பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். பெற்றோர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்று நிகழ்ச்சி இனிமையாக அமைய உதவி புரிந்தனர்.

பெற்றோர்கள் இந்த இனிய நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியும் இதுபோன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மேலும் மேலும் நடத்த வேண்டியும் கேட்டுக்கொண்டனர். ஒமாஹா தமிழ்ச்சங்க தலைவர் நவீன் நிகழ்ச்சிக்கு வந்திருந்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தமிழ்ச்சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here