தமிழ் வளர்க்கும் இலண்டன் தமிழ் பாடசாலை

சட்டன்: இலண்டனில் உள்ள வாலிங்டன் என்ற ஊருக்கு அருகில் சட்டன் என்ற இடத்தில் ‘சட்டன் தமிழ் பாடசாலை’அமைந்துள்ளது.இப்பள்ளி இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை தன்னகத்தே கொண்டு, தமிழ் மற்றும் கலைப்பாடங்களை போதித்து வருகின்றது.

‘சட்டன் தமிழ் பாடசாலை’யின் ஒன்பதாவது ஆண்டு விழா தற்போது நடைபெற்றது. பா.வை.ஜெயபாலன் தம்பதி நடத்தி வரும் இந்த பள்ளி, முழுக்க முழுக்க பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களால் அளிக்கப்படும் நிதிப் பங்களிப்பால் இயங்குகிறது.

இந்த பள்ளியின் ஆண்டு விழா வுட்கோட் சாலை, வாலிங்டன், சரே மகளிர் மேன்நிலைப் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. பின் பாலர்களால் அபிநயப் பாட்டு, பாரதியாரின் ‘ஓடி விளையாடு பாப்பா’ பாட்டு பாடப்பெற்றன. பல்கலாச்சார ஆடை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நடன நிகழ்சிக்குப் பின் விழா தலைவர் ஜெயபாலன் சிறப்பு உரை நிகழ்த்தினார்.

இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திருமதி. இராஜகோபால், திருமதி. சுப்பிரமணியம் பங்கேற்றனர். பின் ‘தமிழ் வளர்போம்’ என்ற நாடகம் நடைபெற்றது. செயலாளர் இரா.மதன்மோகன் நன்றி கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here