தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

தென் அமெரிக்க நாடான கயானாவின் புதிய பிரதமராக தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த, மோஸஸ் வீராசாமி நாகமுத்து கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பதவியேற்றார்.

தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார்.

சுமார் 177 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கரும்புத்தோட்ட கூலி வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் நாகமுத்துவும் ஒருவர் ஆவார்.இந்த நாகமுத்துவின் வம்சாவழி தான் இந்த மோஸஸ் வீராசாமி.இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.

அமைச்சராக தமிழர்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here