தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா : அமெரிக்கா

வட அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் மாகாணத்தில், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பாரதி கலை மன்றத்தின் ஓர் அங்கமாகத் திகழும் தமிழ் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மழலை முதல் எட்டு நிலைகள் வரையிலான குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் பேச்சு மற்றும் எழுத்துத் தமிழ் கற்று வருகின்றனர். தமிழர்களின் கட்டிடக் கலைகள், வாழ்வு முறைகள் மற்றும் வணிக வெற்றிகளை எடுத்துரைக்கும் விதமாகப் பியர்லாந்து நகரில் சாம் கண்ணப்பன் அழகிய அருங்காட்சியினை நிறுவி உள்ளார்.

சுற்றுலா தினத்தன்று பெற்றோர் மற்றும் மாணவர் அனைவரையும் சாம் கண்ணப்பன் வரவேற்று உபசரித்து, அருங்காட்சியகம் குறித்தும் அதன் சிறப்புக் குறித்தும் விவரித்தார். இந்நிகழ்ச்சியில் பியர்லாந்து மேயர் டாம் ரீட் வருகை புரிந்தார். மேலும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here