தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா – பஹ்ரைன்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்கவிழா, சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் 23 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பூ அலி உணவக உள்ளரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்துவிளக்கேற்றி தொடங்கிய விழாவில் சங்க உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

சங்க சமூகநலத்துறை செயலாளர் செந்தில் வரவேற்புரை வழங்க, சங்க விளையாட்டுத்துறை செயலாளர் முகமது பைசல் தொகுப்புரை வழங்க, சங்க நிதித்துறை செயலாளர் மதிவாணன் வாழ்த்துரை வழங்கினார். சங்க செயற்குழு உறுப்பினர்கள் துறைவாரியாக ஓராண்டு சாதனைகளை விளக்கி கூறினார்.

சங்க செயற்குழு உறுப்பினர்கள் முகமது அபுசாலி, தினேஷ், ஜெயமாணிக்கம், கலைமணி, மகரஜோதி, முத்து, பிரதீப், இராஜ்குமார், சுரேஷ், முகமது தாஜுதீன்,  வைத்தீஸ்வரன், பிரகாஷ், தாமரைக்கண்ணன் மற்றும் மங்கையர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் அனீஸ் பாத்திமா, ப்ரீதா மதிவாணன், அனிதா கார்த்திகேயன், ஜெயந்தி சுரேஷ், ஹாஜிரா பைசல் ஆகியோர் செயல்வீரர்களாக அறிவிக்கப்பட்டு, சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பட்டயமும் நினைவுப்பரிசும் கொடுத்து கௌரவித்தனர்.

ஊடகத்துறை செயலாளர் கார்த்திகேயன் ஓராண்டு கால சாதனை விளக்கவுரையை வழங்கி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உறுப்பினர்கள் புகழுரை வழங்கினர். இரவு உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here