தமிழிசை நாட்டிய விழா – சிட்னி

தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டு கழகம் ரசிகா டான்ஸ் அகாடமி ஆதரவுடன் நடத்திய தமிழிசை நாட்டிய விழா சிறப்பாக சிட்னியில் உள்ள castlehill highschool அரங்கத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் மக்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழிசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக “கலைமாமணி” திருநங்கை முனைவர் நர்த்தகி நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது பரதக்கலையை தமிழிசை மூலம் வெளிக்கொணர்ந்தார்.

அமைப்பின் தலைவர் முத்து இராமச்சந்திரன் வரவேற்புரை வழங்க, செயலாளர் அனகன் பாபு அறிமுகவுரை ஆற்றினார். மாலை 4 மணியளவில் குத்துவிளக்கேற்றி விழா இனிதே துவங்கியது. ரசிகா டான்ஸ் அகாடமி மஞ்சுளா விஸ்வநாத் மற்றும் அவரது மாணவிகளின் நாட்டிய நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழிசை நாட்டிய விழா சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது. தமிழிசையில் கலந்து நாட்டிய இன்பத்தை அனைவரும் ரசித்தனர்.

இவ்விழாவில் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டு கழகம், திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு “தமிழிசை நாட்டியமணி” என்கின்ற பட்டத்தை அளித்து கௌரவித்தது. அமைப்பின் பொருளாளர் கர்ணன் சிதம்பரபாரதி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. இதுபோல் தமிழிசை நாட்டிய விழா விருந்து வருடம்தோறும் படைக்கப்படும் என்று விழாவில் உறுதியளிக்கப்பட்டது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here