டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு புதிய இந்துக் கோவில்

அமெரிக்காவில் அமைந்துள்ள டெக்சாஸ் மாகாணம், அபிலெனில் ஒரு இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த இந்துக் கோயில், விஸ்வேஸ்வர சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. பாரம்பரிய இந்து மரபுப்படியும், கட்டடக் கலை நயத்துடனும் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்து மதத்தைப் பரப்புவதும், இந்து சடங்குகளை நிறைவேற்றுவதுமே இந்த கோயிலின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலுக்கு வரும்போது பக்தர்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் நாள்தோறும் காலை 8 மணிக்கு திறக்கப்படுகிறது. நாள்தோறும் இருமுறை ஆரத்தி எடுக்கப்படுகிறது.

விஷ்ணு, ருத்ரன், ராமர், கிருஷ்ணர், துர்கை, கணபதி போன்ற இந்து தெய்வங்களுக்கு வாராந்தர பூஜை நடத்தப்படுகிறது. அன்னதானம், வாகன பூஜை போன்ற கட்டண சேவைகளும் உண்டு. கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களின் வீடுகளுக்கும் சென்று பூஜை செய்து வருகின்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here