டூவீலர் ரேஸர்களுக்கு புத்தாண்டில் இனிப்பு வழங்கி போலீஸ் அறிவுரை

புத்தாண்டு தினத்தில் இரவில் டூவீலர் ரேஸ் நடத்துவது இளைஞர்கள் வழக்கம். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இப்படி ரேசில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். புத்தாண்டு கொண்டாட வந்தவர்களை வழக்கில் சிக்க வைக்க விரும்பாத எஸ்.பி. துரை, சிக்கிய இளைஞர்களுடன் போலீசாரை புத்தாண்டு கொண்டாடும் படி உத்தரவிட்டார்.

அதன்படி ஏற்கனவே தயார் செய்திருந்த கேக்குகளை அவர்களுக்கு வழங்கி ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லி கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது போலீசின் விருப்பம் அல்ல. விதிமுறைகள் அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காகதான் அதுபோன்ற நடவடிக்கைள் எடுக்கப்படுகிறது.

உங்களை நம்பி அப்பா, அம்மா, அக்கா, தங்கை என குடும்பம் இருக்கிறது. உங்கள் உயிரை நீங்கள் தற்காத்து கொள்ள வேண்டும். விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்போம் என்று இந்த புத்தாண்டில் உறுதி ஏற்போம் என்று சொல்லி உறுதி ஏற்க வைத்து அனுப்பி வைத்தனர்.பல இடங்களில் நடந்த இந்த முயற்சியில் எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் புத்தாண்டு தினத்தில் குமரி மாவட்டத்தில் விதிமீறல் வழக்கு பதிவாகவில்லை.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here