செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் புகார் அளிக்கலாம்

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் போக்குவரத்து விதிகளை மீறி டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்களின் லைசென்சை ரத்து செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் ஆர்டிஓக்களுக்கும், போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மதுரை வட்டார போக்குவரத்து துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டுவோர் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது 94981 81457 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்,’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முறையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here