செல்போன் சேவை தடைபடக் கூடாது : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் அனைத்து செல்போன் நிறுவனங்களும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு செல்போனை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் செல்போன் சேவை தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மின்சார சேவையும் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 15 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here