சென்னை கல்லூரிக்கு சிங்கப்பூரில் கவுரவம்

ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த, சிங்கப்பூர் வர்த்தக திறன் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, சர்வதேச தரத்துடன் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது, சென்னையைச் சேர்ந்த, ஆரோ கல்வி சேவை, பெங்களூரின் ஐ.எஸ்.பி.ஆர்., பிசினஸ் ஸ்கூல், கோல்கட்டாவின் மை பிரைவேட் டியூடர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அங்கு சென்று படிக்கும் வகையில், கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகச்சிறந்த கல்வி கற்பதற்கான நிறுவனங்களுக்கான விருது, புனேயைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்., கல்விக் குழுமம், கவுகாத்தியின் பிரான்சன் உறைவிடப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here