சீனர்கள் நடத்திய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கப்பூர் லோயாங் சாலையில் சீனர்களின் தோ பே கோங் கோயில் உள்ளது. இங்கு சீனர்களோடு இந்துக்களும் வழிபடும் வகையில் ஸ்ரீமகாகணபதி ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் சைவ ஆகம முறைப்படி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் 25 சிவாச்சாரியர்கள் யாக பூஜைகளை நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

தமிழகத்தில் கும்பாபிஷேகங்கள் செய்வது போன்றே பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு ஆறுகால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. நிறைவாக மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிங்கப்பூரில் வசிக்கும் 5 ஆயிரம் தமிழர்களுடன் சீனர்களும் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூர் துணைப்பிரதமர் டியோ சீ ஹீன், தகவல் துறை அமைச்சர் ஜனில், மவுன்ட்பாட்டன் எம்பி. லிம் ப்ளோ சுவான் ஆகியோருக்கு இந்து மரபுப்படி பரிவட்டம் கட்டி சுவாமிநாத சிவாசாரியார் பிரசாதம் வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆலய மேலாளர் முரளி, தலைவர் ஜார்ஜ் தோபே விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here