சிட்னியில் சித்திரைத் திருவிழா

சிட்னி: ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் முத்திரைத் திருவிழாவான சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது. சிட்னி வாழ் மக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் மக்களும் ஒன்று கூடி ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் மண்ணிசை/ தமிழிசை நிகழ்ச்சி, உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றன.

அமைப்பின் தலைவர் முத்து ராமச்சந்திரன் வரவேற்க, செயலாளர் அனகன் பாபு விழாவை துவக்கிவைத்தார். மாநில அமைச்சர்கள் ரே வில்லியம்ஸ், டேவிட் எலியட் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக ஜாடி மெக்கே, எம்.பி., பாராளுமன்ற உறுப்பினர்கள் டேவிட் கிளார்க், ஜியாப் லீ, ஹுயூஜ் மெக்டெர்மன், ஜூலியா பின், மார்க் டெய்லர், மாநில பல்லின கலாச்சார கூட்டமைப்பின் தலைவர் ஹரிநாத், இந்திய தூதரக அதிகாரி சார்பாக எஸ்.கே.வர்மா, மாமன்ற உறுப்பினர்கள் ராஜ் தத்தா, சூசை பெஞ்சமின், மொகிந்தர் சிங் மற்றும் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கை சமூக பணியாளர் ஆறுதிருமுருகன், இந்திய தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன், சிலம்பாட்ட கலைஞர் எல்லாளன் என்ற ராஜேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். அமைப்பின் பொருளாளர் கர்ணன் சிதம்பரபாரதி நன்றி கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here