சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு

ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் நடத்திய இனிய இலக்கிய சந்திப்பு சிறப்பாக சிட்னியில் உள்ள சமூக கூடத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் மக்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக கிருபானந்தவாரியாரின் மாணவி ‘கலைமாமணி’ தேச.மங்கையர்க்கரசி முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழுரை வழங்கினார்.

அமைப்பின் தலைவர் முத்து இராமச்சந்திரன் வரவேற்க, செயலாளர் பாபு அறிமுக உரை ஆற்றினார். மாலை ஆறு மணியளவில் குத்துவிளக்கேற்றி விழா இனிதே துவங்கியது. உள்ளூர் கலைஞர்களின் நிகழ்வுகளைத் தொடர்ந்து தேச.மங்கையர்க்கரசி, இலக்கிய இன்பத்தில் திருக்குறளின் மகிமையும் இல்லற வாழ்வின் இனிமையும் குறித்து பேசினார். அவரது தமிழ் உச்சரிப்பையும் ஆன்மிகத்தில் உள்ள ஆளுமையும் அனைவரும் ரசித்தனர். அமைப்பின் பொருளாளர் கர்ணன் சிதம்பரபாரதி நன்றி கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here