சிங்கப்பூரில் நூல் வெளியீடு

சிங்கப்பூர் கவிமாலைக் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகனின் பவள விழாவையொட்டி அவர் எழுதிய “அன்புக்கு அழகு 75” நூல் வெளியீட்டு விழாவை கவிமாலை அமைப்பு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறப்பாக நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தமிழறிஞர் சுப.திண்ணப்பன் தலைமை தாங்கி பவள விழா சிறப்பு பற்றி உரையாற்றினார். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்து வாசித்தார். கே.கேசவபாணி பவள விழா மலரை வெளியிட்டார்.

அன்புக்கு அழகு 75 நூலினை சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் ரா.தினகரன் வெளியிட தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம் முதற்படியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த அருள் பிரகாஷ்  “கவிஞனுக்கு வயது ஏது ?”  என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் போப்ராஜ் ஆள் உயர ரோஜா மாலைகளை பவள விழாத் தம்பதிகளுக்கு பலத்த கரவொலிக்கிடையே அணிவித்து வாழ்த்தினார்.

தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதானத் தமிழ் அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி பவள விழாத் தம்பதிகளை வாழ்த்தினர். முன்னதாக கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இறை மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். பவள விழா நாயகர் கவிஞர் மா. அன்பழகன் தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார். கவிஞர் இன்பா நிகழ்வினை நெறிப்படுத்தினார். பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here