சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

கீழை அ.கதிர்வேல் எழுதிய “நம்பர் விளையாட்டு” என்னும் சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா ஜீலை 15 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அரங்கில் நடைபெற்றது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை வகித்தார். கவிமாலைக் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

கவிமாலை தலைவர் கவிஞர் இறை மதியழகன், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மன்னை ராஜகோபாலன், கண்ணன் சேஷாத்திரி, சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் ஷாநவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தலைவர் இரத்தின வேங்கடேசன் நூலாய்வுரை நிகழ்த்தினார்.

தொழிலதிபர் எம்.முஹம்மது சித்திக் நூலை வெளியிட முதற்பிரதியை சென்னை டிரேடிங், சூப்பர் மார்ட் வை.ராமமூர்த்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் கீழை அ.கதிர்வேல் தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார். முன்னதாக கே.வி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வினை கவிஞர் ப்ரியா கணேசன் நெறிப்படுத்தினார். கீதா ரவிச்சந்திரன் நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here