சிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்..!!

சிங்கப்பூர் யூனூஸ் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு பொங்கல் விழாவையொட்டி சிறப்புப் பட்டி மன்றத்தை வெகு விமரிசையாக நடத்தியது. சமூக மன்ற அரங்கில் நடைபெற்ற இப்பட்டி மன்றத்தை பேராசிரியர் மன்னை ராஜகோபாலன் நடுவராக வீற்றிருந்து வழிநடத்தினார். “இன்றைய நிலையில் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்பவர் இளையரா – மூத்தோரா” ? என்பது பட்டி மன்றத் தலைப்பு.

இளையோரே என கண்ணன் சேஷாத்திரி தலைமையில் அகிலா ஹரிஹரன் மற்றும் கீதா ரவி ஆகியோர் வாதிட்டனர். ராம்குமார் சந்தானம் தலைமையில் ஸ்வர்ணலதா மற்றும் சிவாஜி வெங்கட் ஆகியோர் மூத்தோரே ஆனந்த வாழ்க்கை அனுபவித்து வாழ்கின்றனர் என எதிர் வழக்காடினர். இருதரப்பு வாதங்களையும் உன்னிப்பாக கவனத்தில் கொண்ட நடுவர் மன்னை ராஜகோபாலன் இளையோர்–மூத்தோர் இருசாராருமே ஆனந்த வாழ்க்கையை மேற்கொண்டு சிங்கையில் வாழ்கிறார்கள்.

சிங்கை அரசு இளையோர் வளர்ச்சியில் அக்கறையும் மூத்தோர் நலனில் தனிக்கவனமும் செலுத்தி வருகிறது எனச் சான்றுகளுடன் எடுத்தியம்பித் தீர்ப்பளித்தார். விழாவில் சீன–இந்திய–மலாய் நண்பர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். பாரம்பரியக் கலைகளான உறியடி–நடனம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன. சமூக மன்ற நிர்வாகிகள் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here