சிங்கப்பூரில் கவிமாலை

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, ஜலான் புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிமாலை 208 ஆவது நிகழ்வாக ஜூன் 24 ஆம் தேதி மன்ற அரங்கில் நடைபெற்றது. மனதில் நின்ற கவிதைகள் மற்றும் படித்ததில் பிடித்தவற்றை கவிஞர்கள் முதல் அங்கமாகப் படைத்தனர்.

இந்த மாதக் கவிதைப் போட்டியின் தலைப்பான ” ஒரு வரம் ” என்ற தலைப்பில் கவிதை படைத்து வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்துச் சிறப்பிக்கப்பட்டது. நல்லாசிரியர் ஸ்டாலின் போஸ், “என்றுமுள தென்தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் ராஜு ரமேஷ் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இறை மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here