சிங்கப்பூரில் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

கவிஞர் நூர்ஜஹான் சுலைமானின் “ பொன் விழாப்பூக்கள், இமைகளாய்க் காப்போம் “ கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஆனந்தபவன் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லூர் முஸ்லிம் சங்கத் தலைவர் ஜனாப் நசீர்கனி தலைமை வகித்தார்.

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப.அருணாசலம், தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கத் துணைத் தலைவர் பி.முகம்மது ஜாபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசியப் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன் நூலாய்வுரை நிகழ்த்தினார். தொழிலதிபர் ஜோதி மாணிக்கவாசகம் நூலினை வெளியிட ரஹமத் அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா முதற்படியைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், கவிமாலைத் தலைவர் கவிஞர் இறை.மதியழகன், வழக்கறிஞர் ஆர்.கலாமோகன், ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் எம்.ஏ.காதர் உள்ளிட்ட தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் கவிஞர் நூர்ஜஹான் சுலைமான் தக்க வகையில் ஏற்புரை ஆற்றினார்.

இது கவிமாலை வெளியிடும் 103 – 104 ஆவது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. கவிமாலைக் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here