‘சிகரம் தொடுவோம்’ புத்தக வெளியீடு – மஸ்கட்

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ‘சிகரம் தொடுவோம்’ புத்தக வெளியீடு ஓமனுக்கான இந்திய தூதர் இந்திரமணி பாண்டே முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்திரமணி பாண்டே நிகழ்ச்சியை நம் மரபுப் படி குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார். மஸ்கட் தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

ரேவதி சுந்தர் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். இந்தியத் தூதர் நூலை வெளியிட, சித்ரா நாராயண், குமார் மஹாதேவன், P.R.ராமகிருஷ்ணன், T.கணேஷ், சங்கர் சர்மா, P.S.லக்ஷ்மணன், ஸ்ரீதர் நாராயணசாமி, J.ராஜேந்திரன், T. தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்திரமணி பாண்டே அறிமுக உரை நிகழ்த்தினார். சித்ரா நாராயண் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.

சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேஜமீ ஏற்புரை வழங்கினார். மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் விஜயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூறினார். இந்த  விழாவில் மஸ்கட் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.​

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here