சரக்கு போக்குவரத்தில் ‘இ-வே பில்’ தற்காலிக வாபஸ்

சரக்கு போக்­கு­வ­ரத்­தில் பிப்ரவரி 1ல் அம­லுக்கு வந்த, ‘இ-வே பில்’ நடை­முறை, தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக, துவக்க நாளன்றே முடங்­கி­யது. இதை­ய­டுத்து, இத்­திட்­டத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்ள மத்­திய அரசு, பிரச்ச­னைக்கு முழு­மை­யாக தீர்வு கண்ட பின் அறி­மு­கப்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது.

ஒரு மாநி­லத்­திற்­குள் 10 கி.மீ.,க்கு மேற்­பட்ட தூரத்­திற்­கும்; வெளி மாநி­லத்­திற்­கும் எடுத்­துச் செல்­லப்­படும் 50 ஆயி­ரம் ரூபாய்க்கு அதி­க­மான மதிப்­புள்ள சரக்­கிற்கு, ‘இ-வே பில்’ தயா­ரிக்க வேண்­டும். முதற்­கட்­ட­மாக மாநி­லங்­க­ளுக்கு இடையே சரக்கு போக்குவரத்திற்கான, ‘இ-வே பில்’ திட்­டம், தமி­ழ­கம் உட்­பட பெரும்­பான்­மை­யான மாநி­லங்­களில், பிப்ரவரி 1ல் அம­லுக்கு வந்­தது.

சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், www.ewaybill.nic.in வலை­த­ளத்­தில் அவற்­றின், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்ணை குறிப்­பிட்டு பதிவு செய்து ‘இவே பில்’ தயா­ரிக்­க­லாம் என, தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. அதை பின்­பற்றி, ஒரே சமயத்­தில் லட்­சக்­க­ணக்­கா­னோர், ‘இ-வே பில்’ தயா­ரிக்க முனைந்­த­தால், சிறிது நேரத்தி­லேயே, வலை­த­ளம் முடங்­கி­யது. ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், ‘இ-வே பில்’ தயாரிக்க முடி­யா­மல், சரக்­கு­களை அனுப்ப வழி தெரி­யாது தவித்­தன.

இது தொடர்­பான புகார்­கள் வந்த உடனே, ‘இ-வே பில்’ அம­லாக்­கத்தை, தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­ப­தாக, மத்­திய அரசு அறி­வித்­தது. இது குறித்து, மத்­திய நிதித்துறை செயலர், ஹஷ்­முக் ஆதியா கூறி­ய­தா­வது: “இ-வே பில் நடை­மு­றை­யில் ஏற்­பட்ட பாதிப்­பிற்­கான கார­ணம் குறித்து, வரி பரி­வர்த்­த­னை­களை கையா­ளும், ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தின் தலை­வர், ஏ.பி.பாண்­டே­வி­டம் விளக்­கம் கோரப்­பட்டு உள்­ளது. உறுதி தொழில்­நுட்­பக் கோளாறை சரி செய்து, மீண்­டும், ‘இ – வே பில்’ நடை­மு­றையை அமல்­ப­டுத்த, எத்­தனை நாட்­கள் ஆகும் என்­பது குறித்து, விரி­வான அறிக்கை  அளிக்குமாறு, அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

சோத­னை­யின் போது, இத்­திட்­டம் வெற்­றி­க­ர­மாக செயல்­பட்­டது. துவக்க நாளன்று, ஒரு மணி நேரத்­தில், 3 லட்­சம், ‘இ – வே பில்’கள் தயா­ரித்­த­தால், ‘சர்­வர்’ முடங்கி உள்­ளது. இது தெரிய வந்­த­தும் தொழில் நிறு­வ­னங்­களும், சரக்கு போக்­கு­வ­ரத்து
நிறு­வ­னங்­களும் சிர­மப்­ப­டக் கூடாது என்ற நோக்­கத்­தில் உட­ன­டி­யாக திட்­டம் நிறுத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது. ஜி.எஸ்.டி.என்., அமைப்பு, இம்­மாத மத்­தி­யில், மீண்­டும் இத்­திட்­டத்தை, செயல்­பாட்­டிற்கு கொண்டு வரும் என, எதிர்பார்க்கி­றோம். அப்­போது, எந்­த­வி­த­மான பிரச்­னை­களும் ஏற்­ப­டக் கூடாது என, உறுதி அளிக்க வேண்­டும் என பாண்­டே­வி­டம் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது”. இவ்­வாறு அவர் கூறி­னார்.

 

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here