கோவை நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

கோவை மாவட்டத்தில் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆகும். கோவை மாவட்ட சிவில் நீதித்துறை  அமைச்சுப்பணி, தமிழ்நாடு பொது மற்றும் சார்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாகவுள்ள இளநிலை நிர்வாகப் பணியாளர்ப் பணிக்கு வேலை வாய்ப்பு பெற தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து சுய கையொப்பமுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பிப்போரில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
சேர்ம்ன் பிரின்ஸ்பால்,
டிஸ்டிரிக் லீகல் அத்தார்ட்டி,
கம்பைனைடு கோர்ட் பில்டிங்,
கோயம்புத்தூர் – 641018.

விண்ணப்ப இணைப்பை பயன்படுத்தி தேவையான தகவல்களை முறைப்படி இணைத்து, சான்றிதழ் நகழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்போர்களுக்கு விதிமுறைப்படி சம்பளத்தொகை மாதம் ரூபாய் 19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 1.7.2017ன்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதி தேதி டிசம்பர் 12 ஆகும்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here