கேசி தமிழ் மன்றத்தின் பறை பயிற்சிப் பட்டறை….!!

கேசி தமிழ் மன்றத்தின் ஆதரவுடன் ஆஸ்திரேலிய தமிழர் கலையகம் இணைந்து ஆண்டுதோறும் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் “ஆஸ்திரேலிய தேசம் முழுவதும் தமிழர் கலைகள் – 2020” என்னும் தலைப்பில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அவற்றுள் அனைவரையும் மிகவும் கவரப்பட்டது பறை பயிற்சிப் பட்டறை என்னும் நிகழ்ச்சியாகும். பறை அடிக்கும் நபர்கள் பறை அடிக்க, மன்றத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சூழ்ந்து நின்று பறை அடிப்பதை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தாமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு பறை அடிக்க பழகினர். இந்நிகழ்ச்சி பார்பதற்கு மிகவும் அருமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here