குறை தீர்க்கும் புதிய ‘ஆப்’ அறிமுகம் – ரயில்வே நிர்வாகம்

ரயிலில் பயணம் செய்யும் பயணியர், தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க, புதிய மொபைல் போன் ‘ஆப்’ எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரயில் பயணியர், தங்கள் புகார்களை தெரிவிக்க 14 விதமான புகார் பதிவு முறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர வலைதளம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள புகார் பதிவு முறைகளும் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், புதிய மொபைல் போன் செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. எம்.ஏ.டி.ஏ.டி., என அழைக்கப்படும் பயண நேரத்தில் தேவையான உதவிகளுக்கான இந்த செயலி, இந்த மாதம் முதல் செயல்படத் துவங்க உள்ளது. ‘ரயில் பயணத்தின் போது, அசுத்தமான கழிப்பறை, தரமற்ற உணவு போன்ற புகார்களை இந்த செயலி மூலம் உடனுக்குடன் தெரிவிக்கலாம். ‘இந்த புகார்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணியர் புகார் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, பின்தொடரும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. மேலும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பயணியருக்கு, உடனே தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ரயில் டிக்கெட்டில் உள்ள, பி.என்.ஆர்., எண்ணை, செயலியில் குறிப்பிட்டு, புகார்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் எஸ்.எம்.எஸ் மூலம், புகார் பதிவு எண் அனுப்பப்படும்.

‘அந்த எண்ணின் உதவியுடன், உங்கள் புகார் சரி செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்’ என, ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. ‘இந்த செயலி அறிமுகப் படுத்தப்பட்டாலும், மற்ற புகார் முறைகளும் வழக்கம் போலவே செயல்படும்’ என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here