குருவாயூரப்பன் கோவில்-அமெரிக்கா

அமெரிக்கா: இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணம், மோர்கன்விலே என்ற இடத்தில் குருவாயூரப்பன் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முக்கிய மூலவராக குருவாயூரப்பர் காட்சியளிக்கிறார்.

இத்திருத்தலத்தில் நுழைந்தவுடன் இடப்புறம் மீனாட்சி திருக்கல்யாண கோலக் காட்சியும், வலப்புறத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண காட்சியும் காணலாம். மேலும் சிவபெருமான், கன்னிகா பரமேஸ்வர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் சிலைகளும் இங்குள்ளன. இத்திருத்தலத்தி்ன் கீழ்தளத்தில் உள்ள ஒரு பகுதியில் கலை அரங்கமும், பிரசாதம் கொடுக்கும் இடமும் அமைந்துள்ளது.

இத்தலம் காலை 8.30 மணி முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் நடை திறந்திருக்கும்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here