கந்த‌ சஷ்டி திருவிழா 2017 – அமெரிக்கா

அமெரிக்காவின் நெபராஸ்கா மாகாணத்தில், ஒமாகா நகரில் கந்த சஷ்டி திருவிழா அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முருகக் கடவுள் சூரனை அழித்த சூரசம்ஹாரம் நிகழ்வில் “கந்தனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷத்தோடு ஏராளமான அன்பர்கள் பங்குபெற்றனர். பின்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முருகனுக்கு காவடி எடுத்து முருகனை வலம்வந்தனர்.

இறுதியாக‌ முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு மிகச்சிறப்பாக‌ நடைபெற்றது. பெருந்திரளான தமிழ் குடும்பத்தார் கலந்துகொண்டு தமிழ்கடவுள் முருகனின் அருளை பெற்றனர். விழாவின் சிறப்பாக முதன் முறையாக முருகன், தெய்வானை திருமண விருந்து தலைவாழை இலையில் அறுசுவை உணவுடன் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

கந்த‌ சஷ்டி திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் இந்த இனிய விழாவை எற்பாடு செய்த கந்த‌ சஷ்டி விழாக் குழுவினருக்கும், மற்றும் பங்கு கொண்ட தன்னார்வலர்களுக்கும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here