கடலின் மேல் மற்றுமொரு பாலம் – மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பந்த்ரா-ஓர்லி கடல் மேல் பாலம் கட்டப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் வெர்சோவா-பந்த்ரா இடையே மற்றொரு கடல்மேல் பாலம் கட்டும் திட்டத்திற்கு கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைப்பின் தடையில்லா சான்று, கடலோர ஒழுங்கு முறை மண்டலம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் 2013-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. இதில் வெர்சோவா-பந்த்ரா கடல் மேல் பாலம் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.7,502 கோடி மதிப்பில் மொத்தம் 17.7 கி.மீ தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பாலம் பந்த்ரா, அட்டர் கிளப், ஜூகூ சாலையும், வெர்சோவா சாலையையும் இணைக்கிறது. இதன் மூலம் மும்பையில் பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என தெரிகிறது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here