ஒமாகா நகரில் தமிழ் நகைச்சுவை நாடகம்.

அமெரிக்காவின் நெபராஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள ஒமாகா இந்து கோயிலில் ஒய்.ஜி.மதுவந்தி – சுரேஸ்வர் குழுவினரின் புதிய நகைச்சுவை நாடகம் ‘தில்லாலங்கடி மோகனாம்பாள்’ நடைபெற்றது. ஒமாகாவாழ் தமிழர்களும் இக்கலைக்குழுவினருடன் இணைந்து நடித்தனர்.

காட்சிக்கு காட்சி சிரிப்பு மழையும், இணைந்து நடித்த உள்ளுர் மக்களின் அருமையான நடிப்பும் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது. பெருவாரியான தமிழ் குடும்பங்கள் வந்திருந்து நகைச்சுவை நாடகத்தினை கண்டுகளித்தனர்.

நாடக முடிவில் ஒமாகா தமிழ்ச்சங்கத் தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார். மூன்றாவது ஆண்டாக நாடகம் சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து ஒமாகா தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் நவின் நன்றி தெரிவித்தார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here