எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆல் பாஸ் திட்டம் ரத்து – மத்திய அரசு

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் – 2009ன் படி நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனைவரும் தேர்ச்சி பெறும் திட்டத்தால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதன்படி அமைக்கப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தில் பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும், இதிலும் அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here