இன்று உலக மீனவர்கள் தினம் – நவம்பர் 21

மீனவர்களின் வாழ்வு செழிக்க உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்களால் நவம்பர் மாதம் 21- ஆம் தேதி ‘உலக மீனவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் போது நடுக்கடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அதற்கு தீர்வு காணும் வகையில் சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகள் 1997- ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி டெல்லியில் உலக மீன் தொழிலாளர் பேரவையை உருவாக்கினர்.

இந்நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி ஆலயங்களில் வழிபாடு செய்கின்றனர். குறிப்பாக, தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது, மீனவர்களை கைது செய்வது, துன்புறுத்துவது, அச்சுறுத்துவது, சிறையில் அடைப்பது போன்ற அத்துமீறல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here