இனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்..!!

தற்சமயம் வண்டலூரில் இருக்கும் அண்ணா உயிரியல் பூங்காவில் இணையதளம் மூலம் விலங்குகளை நேரடியாக பார்க்க லைவ் ஸ்ட்ரீமிங் (live streaming) எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மக்களுக்கு இந்த புதிய வசதி உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வண்டலூர் உயரியல் பூங்காவை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிகமாக வருகின்றனர்.

குறிப்பாக பல வெளிநாட்டவர்கள் அதிகமாக வண்டலூர் உயரியல் பூங்காவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே பார்வையாளர்களை கவரும் வகையில் தற்போது புதிய முயற்சியை செயல்படுத்தியுள்ளது. அதன்படி பார்வையாளர்களை கவரும் வகையில் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் ஆன்லைன் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் (live streaming) வசதியை தமிழ் புத்தாண்டு அன்று முதல் முறையாக அறிமுகம் செய்தது.

தற்சமயம் அண்ணா உயிரியல் பூங்காவில் இணையதளம் மூலம் சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்காவல் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டுமே காண முடியும், என அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளை புலி, வங்க புலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை பார்க்க முடியும் என அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விலங்குகளின் செயல்பாடுகளை https://www.aazp.in/live-streaming/என்ற இணையதளத்தில் நேரடியாக பார்க்க முடியும் என்று வண்டலூரில் இருக்கும் அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட வரும் பார்வையாளர்கள் இரவில் தங்கி சுற்றி பார்க்க புதிய வசதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்குவதற்கான முன்பதிவுகளை பூங்காவின் https://www.aazp.in/ro-om_sea-r-ch/-இந்த இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட கட்டணம் இதற்கு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here