இனி ராணுவ வீரர்களுக்கே முன்னுரிமை – ஏர் இந்தியா

முதன்முறையாக இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் ஏற முன்னுரிமை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் ஏறுவதற்கு தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சிறப்பு திட்டம் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் விமானத்தின் உள்ளே செல்ல முதல்வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு முன்னர், முப்படைகளைச் சேர்ந்த வீரர்களே முதலில் அழைக்கப்படுவார்கள்.

நாட்டிற்காக போராடும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அஸ்வனி லோஹானி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பயணக் கட்டணத்தில் ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே கட்டண சலுகை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here